
இன்று (12-06-2017) கீழக்கரை முஸ்லிம் பஜாரில் திமுக மற்றும் தோழமைக் கட்சி சார்பாக மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நகரச் செயலாளர் SAH.பசீர் அகமது தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையை மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகம்மது இக்பால் நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சிகளும் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் ஆர்பாட்டத்தில் மாட்டிறைச்சிக்கு தடை செய்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அனைத்துத் தோழமைக்ககட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.