கீழக்கரை நகராட்சியில் உள்ள பிரச்சினைகளை தீரக்க திமுக சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் மனு.. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என திமுக எச்சரிக்கை…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிமுகவை நிராகரிப்போம் என்கின்ற தலைப்பில் திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் 21-வார்டு பகுதியை சேர்த்து 10 இடங்களில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள பிரச்சனைகளை விளக்கினார்கள்,  அதை திமுக சார்பில் இன்று நகர் செயலாளர் பஷீர் அகமது தலைமையில் நகராட்சி தலைமை பொறியாளர் முஹம்மது மீரான் மற்றும் சுகாதார ஆய்வாளர் பூபதி இடம் மனு அளிக்கப்பட்டது.

இப்பிரச்சினைகளுக்கு ஒரு வார காலத்திற்குள் நிறைவேற்றித் தர கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இப்பிரச்சினைகள் நிறைவேற்றவில்லை எனில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மக்களைத் திரட்டி கீழக்கரை நகராட்சி மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று நகர கழக செயலாளர் தெறிவித்தார்.

இந்நிகழ்வின் போது நகரத் துணைச் செயலாளர் கென்னடி நகர் கழகப் பொருளாளர் சித்திக், மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சாகுல் ஹமீது, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் முகம்மது சுஐபு, மாவட்ட பிரதிநிதி மரைக்கா, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பயாஸ், நைம் மற்றும் கழக நிர்வாகிகள் அஸ்கர் அலி, அக்பர் அலி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்றைய செய்தி நிரந்தர வரலாறு” கீழை நியூஸ்.