புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்த மழைநீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள மணிவிழாதெரு 7,8,9 உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது. இதனை முறையாக வடிகால் வெட்டி தேங்கிய தண்ணீரை வெளியேற்ற கோரி அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என கூறி அறந்தாங்கி ஆவுடையார்கோவில் முக்கிய சாலை பகுதியான அக்னி பஜார் என்னும் இடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து பாதிப்பு அடைந்த அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.அதிகாரிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்
47
You must be logged in to post a comment.