நெல்லை மேற்கு மாவட்டத்தில் மாற்று கட்சியினர் 30பேர் திமுக வில் சங்கமம்..

நெல்லை மாவட்டம் செங்கோட்டை, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் பகுதிகளை சேர்ந்த புதிய தமிழகம் கட்சியினர் 30 பேர் நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தென்காசி தொகுதிக்கு உட்பட்ட செங்கோட்டை, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் முன்னாள் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் செங்கோட்டை ஒன்றிய புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி செயலாளர் இசைக்குமார், மாணவரணி அமைப்பாளர் மகேஷ், கோபி, சுரேஷ், முருகன், மணி, வாசுதேவநல்லூர் முத்துப்பாண்டியன், ஜெயராஜ் பாண்டியன், சண்முகையா, ராஜ்குமார், பால்ராஜ், ஜேம்ஸ், துரை, மோகன்தாஸ், கருப்பசாமி, சுடலை, பூமாரி, முனியாண்டி, சங்கரன்கோவில் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த பூசைப்பாண்டியன், மரியதாஸ், ஜீவா உட்பட 30 பேர் அக்கட்சியில் இருந்து விலகி குற்றாலத்தில் நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக அவைத்தலைவர் முத்துப்பாண்டி, செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, செங்கோட்டை நகர செயலாளர் ரஹீம், கடையநல்லூர் நகர செயலாளர் சேகனா, தென்காசி ராமராஜ், வடகரை ராமர், ஐவேந்திரன், தினேஷ், மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்