Home செய்திகள்மாநில செய்திகள் ED, IT மூலம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ஊழல் செய்த கட்சி பாஜக!-கனிமொழி எம்.பி. கடும் விமர்சனம்..

ED, IT மூலம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ஊழல் செய்த கட்சி பாஜக!-கனிமொழி எம்.பி. கடும் விமர்சனம்..

by Askar

இந்தியா கூட்டணி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து, கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி நல்முனை சாலை சந்திப்பு பகுதியில் கழக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “இந்த தேர்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது மீண்டும் மேற்கொள்ள உள்ள சுதந்திரப் போராட்டம். அதிமுக, பாஜக வேட்பாளர்கள் உங்களை சந்தித்து வாக்குகள் கேட்கும் பொழுது அவர்களிடம் விவசாய மக்களுக்காக நீங்கள் செய்தது என்ன என்று கேளுங்கள்.வேளாண் மசோதாவை கொண்டு வந்து விவசாய மக்களை பாதிப்படையை சேர்ந்தது பாஜக. அதற்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுக.

தொழிலாளர்கள் மட்டுமல்ல அனைவருக்கும்மான ஆட்சியாக நம் முதலமைச்சரின் ஆட்சி உள்ளது. நீங்கள் கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கலாம் என்று போராடாமல் இருக்காதீர்கள். தொழிலாளர்கள் என்றால் போராட வேண்டும் என்று சொன்ன ஒரே முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அவர் வழியில் நம் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி. ஆனால் ஒன்றியத்தில் உள்ள பாஜகவின் அரசு மக்களுக்கான அரசு அல்ல, அதானி அம்பானி அவர்களின், அவர்களுக்கான அரசு.நாம் ஒரு ரூபாய் நிதியாக வழங்கினால் ஒன்றிய அரசு நமக்கு 25 பைசாவாக திரும்பி அளிக்கிறது ஆனால் உத்திரபிரதேசத்திற்கு இரட்டிப்பாக 2.22 ரூபாய் வழங்குகிறது.

நாம் தேர்தல் வாக்குறுதியில் அளித்து போல, மகளிர் அனைவருக்கும் மாதம் ரூபாய் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று, சொன்னதை செய்து காட்டி 1.15 லட்சம் மகளிர்கள் திட்ட மூலம் பயன் பெற்று வருகின்றனர். நாம் நினைக்கும் நியாயமான ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்கள் அமைக்கப்படும். இந்தியா கூட்டணியின் ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

சமையல் எரிவாயுவிற்கு மானியம் வழங்குவதாக மோடி தெரிவித்தார். ஆனால் இதுவரை யாருக்கும் மானியம் வழங்கவில்லை. அவர் ஆட்சி பொறுப்பேற்ற பொழுது சமையல் எரிவாயுவின் விலை 410 ரூபாயாக இருந்தது, தற்பொழுது 1050 விற்கப்படுகிறது. நாம் ஆட்சிக்கு வந்தவுடன், சமையல் எரிவாயு 500 ஆகவும், பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

தேர்தல் பத்திரங்களை கொண்டு வந்து சட்டப்படி ஊழல் செய்து கொண்டுள்ள கட்சி பாஜக, நடு இரவில் வீட்டிற்குள் புகுந்து கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு திருடுவது போல, நள்ளிரவில் அமலாக்க துறை அல்லது வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தி, அவர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியாக பெற்று கொள்கிறேன். அதே அவர்கள் பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் வைத்துள்ள பெரிய சலவை இயந்திரத்தில் போட்டு அவர்களை வெள்ளை ஆக மாற்றிவிடுகின்றனர். அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறைகளின் 90% வழக்குகள் எதிர்க்கட்சியினர் மீது பாஜக போட்டுள்ளது” என்று கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com