அரசு பெண் மருத்துவரின் பணியை தடுத்த போதை ஆசாமிகள் கைது..

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை வார்டில் உதவி மருத்துவர் சினேக ரத்தினம் நேற்றிரவு (19. 02 2019) 7: 00 மணியளவில் பணியில் இருந்தார். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரின் நலம் விசாரிக்க பண்ணவயல், வெட்டிவயல் பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் குடிபோதையில் அவசர சிகிச்சை வார்டில் மருத்துவமனை ஊழியர் அனுமதியின்றி உள்ளே நுழைந்தனர். அவர்களை கண்டித்த மருத்துவர் சினேக ரத்தினத்திடம் தகராறு செய்தனர். தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீசில் சினேக ரத்தினம் புகார் கொடுத்தார். இதன்படி வெட்டிவயல் நல்லையா 43, ராஜேந்திரன் மகன் சுரேஷ்குமார் 25 ஆகியோரை திருவாடானை சார்பு ஆய்வாளர் கணேசன் கைது செய்தார். தப்பி ஓடிய பண்ண வயல் அலெக்ஷ் மகன் சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.

#Paid Promotion