Home செய்திகள் நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா?தயாநிதி மாறன் கேள்வி: திருமாவளவன் விமர்சனம்! தயாநிதி மாறன் வருத்தம் தெரிவித்து ட்வீட்!

நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா?தயாநிதி மாறன் கேள்வி: திருமாவளவன் விமர்சனம்! தயாநிதி மாறன் வருத்தம் தெரிவித்து ட்வீட்!

by Askar

திமுக எம்பி தயாநிதி மாறன் தலைமை செயலாளரை சந்தித்த பின் அளித்த பேட்டியின் போது ‘நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா’ என்று கேள்வி எழுப்பியதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளன் விமர்சித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் வழங்குவதற்காக திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகிய நான்கு பேரும் தலைமை செயலகத்திற்கு அண்மையில் சென்றார்கள்.

அப்போது தலைமை செயலாளரை சந்தித்து மனுக்களை அளித்த அவர்கள், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்களில் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி.க்கள் நால்வரும் தலைமைச் செயலாளர் சண்முகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பி வைத்துள்ள பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என டி.ஆர்.பாலு புகார் கூறினார்.

திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலுவை தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன், திமுக ஆற்றி வரும் நிவாரணப் பணிகளை பார்த்து முதலமைச்சருக்கு பொறாமை இருக்கிறதோ இல்லையோ தலைமைச் செயலாளருக்கு இருக்கிறது என சாடினார். மேலும், எம்.பி.க்களை சந்திக்கிறோம் என்பதை கூட மறந்து டிவி பெட்டியில் சத்தத்தை அலறவிட்டதாக தலைமைச் செயலாளர் மீது தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டினார். மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக ”உங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை” என தலைமைச் செயலாளர் கூறியது அதிர்ச்சி அளித்ததாக தயாநிதி கூறினார். மேலும் தனது பேட்டியின் போது “நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா” என கேட்டார்.

இந்த விவகாரம் குறித்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி விமர்சித்து உளளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால்,அந்தவேகத்தில் ‘நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா’ என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது.இது தோழமை சுட்டுதல்.” என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தயாநிதிமாறன் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், தமிழக அரசின் தலைமைச்செயலாளரை சந்தித்தது குறித்து நான் அளித்த பேட்டியின் போது,தலைமை செயலாளர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில்தான் கூறியிருந்தேனே தவிர எவருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு சிறிதும் இல்லை என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!