Home செய்திகள் தாராபுரம் நெடுஞ்சாலை அருகே பொருள்கள் கூடுதல் விற்பனை மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை

தாராபுரம் நெடுஞ்சாலை அருகே பொருள்கள் கூடுதல் விற்பனை மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை

by Baker BAker

மதுரையில் இருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில் தாம்பரம் அடுத்து அரசு போக்குவரத்து பேருந்துகள் இரவு நேரங்களில் சிறிது நேரம் பயணிகள் இளைப்பாறும் வகையில் குறிப்பிட இடங்களில் பேருந்துகளை நிறுத்துகின்றனர். பேருந்து நிற்கும் இடங்களில் சிற்றுண்டி கீதா பேக்கரி கடையில் உணவு பொருள் வடை 15, டீ காபி 20 ரூபாய் வாங்குகிறார்கள் அதில் சிறிய அளவு பேப்பர் கப்பில் தான் கொடுக்கின்றார்கள் .தரம் குறைவாகவும் விலை உயர்வாகும் காணப்படுகிறது. மேலும் இருபது ரூபாய் கொடுத்து வடை பெற்றால் ஐந்து ரூபாய் மீதம் கொடுக்காமல் கட்டாயப்படுத்தி அதற்கு மாற்றுப் பொருள்களை கொடுக்கின்றனர் இந்த வேலையை தொடர்ச்சியாக கீதா பேக்கரி செய்து வருகிறது காரணம் அரசு பேருந்துகள் கட்டாயம் இந்த இடத்தில் தான் நிறுத்தப்படுகின்றது. வேறு வழி இல்லாமல் பயணிகள் இக்கடையை பயன்படுத்தக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் கூடுதலாக விற்பனை செய்யும் கடைகள் மீது அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மெத்தன போக்கை கையாண்டு வருகின்றனர் எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் கோரிக்கை வைக்கப்படுகின்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!