டெங்கு விழிப்புணர்வு சோதனையால் பாதிக்கப்பட்ட பழைய இரும்பு வியாபாரிகள் காலவரையற்ற போராட்டம் அறிவித்து கண்டன சுவரொட்டிகள்…

கீழக்கரையில் கடந்த சில வாரங்களாக டெங்கு கொசுவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பல வியாபார வணிகங்களில் சோதனை நடத்தப்பட்டு, சுகாதாரம் பேணப்படாத வியாபார ஸ்தலங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இந்த செயல்பாட்டால் சிறு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். அதில் மிக முக்கியமாக பழைய பொருட்களை வாங்கி விற்கும் சிறு தொழில் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள்.

இவ்வகையான நகராட்சியின் செயல்பாட்டை கண்டித்து கீழக்கரை நகரின் முக்கிய வீதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் காலவரையற்ற கடையடைப்பு என்ற அறிவிப்புடன் பழைய இரும்பு வியாபார தலங்கள் மூடப்பட்டுள்ளன. இப்பிரச்சினைக்கு நகராட்சி உடனடியாக தலையிட்டு சிறு வியாபாரிகள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.