
கீழக்கரை நகராட்சி நிர்வாகம் இன்று (08-09-2017) அன்று ஊர் முக்கிய பகுதியான முஸ்லிம் பஜார், மெயின் ரோடு சந்திப்பு மற்றும் முக்கிய பகுதிகளில் கலை கூத்து மூலம் திறந்த வெளியில் மலம், ஜலம் கழிப்பதால் ஏற்படும் தீமை மற்றும் அதன் மூலம் எவ்வாறு டெங்கு கொசுக்களின் முட்டைகள் பெருகுகின்றன என்பதை விளக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த கலை கூத்து நிகழ்ச்சி தேவகோட்டை விவேகம் கலைக்குழுவினர் மூலம், கரகாட்டம் ஆடி மக்களுக்கு விழிப்புணர்வு செய்தியை மக்களுக்கு எத்தி வைத்தார் கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழக்கரை நகராட்சி ஆணையர் வசந்தி தலைமையில் நடைபெற்றது .
Nice idea…
This one of way to reach the public
Good job