ஒகனேக்கல் பகுதியில் வனத்துறை வசூல் வேட்டைக்கு பலியான இளைஞர்..

ஒகேனக்கல் அருகே வனத்துறையின் வசூல் வேட்டையால் சுங்கச்சாவடியில் மோதி வாலிபர் பலி ஆகியுள்ளார்.  தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே நாடார் கொட்டாய் பகுதியை சேர்ந்த கோவிந்தராஐ் மகன் பவுனேசன்(25). இவர் பி.எஸ்.சி அக்ரி முடித்துவிட்டு.அஞ்செட்டி பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். இவர் இன்று காலை அஞ்செட்டியில் உள்ள கடைக்கு சென்று வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது ஆலம்பாடியில் வனத்துறைக்கு சொந்தமான சுங்கசாவடி உள்ளது.இந்நிலையில் பவுனேசன் இருசக்கர வாகனத்தில் வந்த கொண்டிருந்தபோது, வனத்துறையினர் வாகனத்தை நிறுத்தி வசூல் செய்வதற்காக அங்கு பணியில் இருந்த வனத்துறையினர் அவசர அவசரமாக அங்கிருந்த கேட்டை இழுத்து மூடினர்.

அப்பொழுது வாகனத்தில் வந்த பவுனேசன் கேட்டில் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வனத்துறையின் வசூல் வேட்டையே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள்மற்றும் பொதுமக்கள் ஆலம்பாடியில் வனத்துறைக்கு சொந்தமான சுங்கச்சாவடி முன்பு அமர்ந்தும், சாலையின் நடுவே கற்களை வைத்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் போலிசார் குவிக்கப்பட்டு வருகிறனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் டி.எஸ்.பி ராஐ்குமார் பவுனேசனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

செய்தி:-தர்மபுரி ஸ்ரீதர்