Home செய்திகள் நடுக்கடலில் தவறி விழுந்த இலங்கை கடற்படை வீரர் மீட்பு… மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் அச்சம்..

நடுக்கடலில் தவறி விழுந்த இலங்கை கடற்படை வீரர் மீட்பு… மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் அச்சம்..

by ஆசிரியர்

படகை சோதனையிட முயன்றபோது தவறி விழுந்த இலங்கை கடற்படை வீரர் நீண்ட நேரத்திற்கு பின் மீட்கப்பட்டார். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (டிச.23) காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நேற்று முன் மதியம் 2:00 மணியளவில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பெரிய கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை நிறுத்துமாறு கூறினர்.

இதையடுத்து நிறுத்திய படகை சோதனை செய்ய இலங்கை கடற்படை வீரர் ஒருவர் ஏற முயன்றார். அப்போது அந்த வீரர் தவறி விழுந்தார். கடலில் தவறி விழுந்த வீரரை மீட்கும் முயற்சியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டனர். அப்போது தமிழக மீனவர்கள் தங்கள் படகுடன் அங்கிருந்து புறப்பட்டு நேற்றிரவு கரை திரும்பினர். கடலில் விழுந்த இலங்கை கடற்படை வீரர் குறித்த தகவல் இலங்கை கடற்படையினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ராமேஸ்வரம் படகுகள் மீன் பிடித்து கொண்டிருந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி மீனவர்களை அங்கிருந்து விரட்டினர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர். கடலில் விழுந்த இலங்கை கடற்படை வீரர் நீண்ட நேர போராட்டத்திற்கு மீட்கப்பட்டார். ராமேஸ்வரம் மீனவர் படகில் சோதனையிடச் சென்ற தங்கள் வீரரை, படகில் இருந்த மீனவர்கள் கடலில் தள்ளிவிட்டு படகுடன் மீனவர்கள் தப்பி சென்றதாக இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படை, இந்திய வெளியுறவு துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை (24.12.18) மீன்பிடிக்கச் செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com