தேவிப்பட்டிணம் அருகே அழுகிய நிலையில் உடல் கரை ஒதுங்கியது..

தேவிப்பட்டிணம் அருகே இரணியன்வலசை கடற்கரையில் இன்று (05/04/2018) அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. விபரம் அறிந்த காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர்.

அச்சோதனையில் உடலில் இருந்த அடையாள அட்டை மூலம் கரை ஒதுங்கிய உடல் சென்னை, கோடம்பாக்கம், புலியூரிபுரத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் (60) என்பவர் என்பது அறிய வந்தது. இச்சம்பவத்தை தேவிப்பட்டிணம் கடலோர காவல் படையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.