கீழக்கரை சக்கரைகோட்டை அருகே பெரும் விபத்து..

கீழக்கரையில் இருந்து இராமநாதபுரம் அருகே உள்ள சக்கரைகோட்டை அருகே ஹயுன்டாய் கார் ஒன்று கட்டுப்பாடு இல்லாமல் வந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

கீழக்கரையைச் சார்நத இராமநாதபுரம் மாஸ்டர் பேக்கரியைச் சார்ந்த சீனி என்பவர் படுகாயம் அடைந்து இராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அச்சாலையில் கட்டுப்பாடு இல்லாமல் குடி மோதையில் ஓட்டி  வந்த வாகனம் இரண்டு பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.