குடும்பத்தகராறு காரணமாக கொலை செய்ய முயற்சி.. நகை கொள்ளை…

இராமநாதபுரம் மாவட்டம், கொட்டியக்கார வலசையை சேர்ந்த சீனி இப்றாகீம் (s /o லேட் சாகுல் ஹமீது) கருத்தமரைக்கா (எ) சேகு முகைதீன் (s/o முகம்மதுஉசேன்) உறவினர்களான இருவருக்கும் சமீப காலமாக குடும்ப பிரச்சினை ரீதியாக தகராறு ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளது.

இந்நிலையில் இன்று (19-10-2017) காலை 08.00 மணி அளவில் சீனி மகன் ஷேக் முகம்மது சர்பான், அவருடைய சின்ன தாயார் தாஜ் நிசாவுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வள்ளி மாடன் வலசை அருகில் கச்சி மரைக்கா, ரியாஸ் மற்றும் அடையாளம் தெரியாத 3 நபர்கள் வழிமறித்து, கம்பு மற்றும் வாளால் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தின் பொழுது பெண்ணின் கழுத்தில் கிடந்த 9.5 பவுன் நகையையும் பறித்து கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அச்சமயம் அங்கு வந்த சர்பான் தந்தை சீனியை பார்த்ததும் அந்த 5 நபர்களும் தப்பி விட்டனர். உடனே காயமடைந்து மயக்கமுற்ற நிலையில் இருந்த சேக் முகம்மது சர்பான் மற்றும் அவருடைய சின்ன தாயாரையும் இராமநாதபுரம் அரசுமருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..