ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையில் மாடுகளின் வரத்து அதிகமானதால் விலைகுறைவு..விவசாயிகள் கவலை….

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையில் மாடுகளின் வரத்து அதிகரித்து உள்ளதால் விலை குறைவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளும் வியாபாரிகளும் கவலையடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் சங்குபிள்ளைப் புதூர் அருகே ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் கொண்டுவரும் மாடுகள் மட்டுமல்லாது மதுரை, தேனி, திருச்சி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கொண்டுவரும் கால்நடைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.