Home செய்திகள்உலக செய்திகள் விமன் இந்தியா (WIM) மூவ்மென்ட் மாவட்டத் தலைவர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வாழ்த்து செய்தி

விமன் இந்தியா (WIM) மூவ்மென்ட் மாவட்டத் தலைவர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வாழ்த்து செய்தி

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டம் (WIM) விமன் இந்தியா மூவ்மென்ட் கிழக்கு மாவட்டம் தலைவர் ரம்ஜான் பேகம் பி.காம் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது : பில்கிஸ் பானு வழக்கு -11 கொடுங் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்கவேண்டும். பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை பலஉண்மைகளை மறைத்து மோசடி மூலம் குஜராத் அரசால் விடுதலை செய்வதற்காக உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன 11 பேரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது . இந்த அதிரடியானஉச்சநீதிமன்ற தீர்ப்பை விமன் இந்தியா மூவ்மெண்ட் வரவேற்கிறது. பல வருடங்களுக்கு மேலாக நீதி வேண்டிசட்டம் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சற்று ஆறுதல் அளிக்கிறது 11 கொடுங் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்து உரிய தண்டனையை காவல்துறையும் நீதிதுறையும் வழங்க வேண்டும் என விமன் இந்தியா மூவ்மெண்ட் வலியுறுத்துகிறது . காலம் கடந்து வந்த இந்த தீர்ப்பு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இறுதியாக நீதியே வெல்லும் என்று இந்த தீர்ப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com