Home செய்திகள் பாஜக அரசு தமாஷான ஒரு தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள்-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி..

பாஜக அரசு தமாஷான ஒரு தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள்-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி..

by Askar

பாஜக அரசு தமாஷான ஒரு தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி..

அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் புகைப்படத்திற்கு அக்கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்வுக்கு பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியமூர்த்தி பவனில் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம்.

புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டத்தை பாஜக சிதைக்க நினைக்கிறது. ஒரு தேர்தல் ஒரு அதிபர் என்று துணிச்சலாக தேர்தல் வாக்குறுதியை கொடுத்திருக்கிறார்கள்.

ஒருபோதும் ஒரு நாடு ஒரு தேர்தலில் அம்பேத்கருக்கு உடன்பாடு கிடையாது.

இந்த தேசம் எல்லோருக்குமான தேசம், ஒரு சாராருக்கான நாடு இல்லை. சர்வாதிகாரத்தை ஒருபோதும் திணிக்க முடியாது.

சர்வாதிகாரத்தை அனுமதிக்காத தேர்தல் அறிக்கையை நாங்கள் கொடுத்துள்ளோம். சர்வாதிகாரத்தை அனுமதிக்கின்ற தேர்தல் வாக்குறுதியை பாஜக கொடுத்துள்ளது.

இந்த தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாத்திற்குமான தேர்தல். சர்வாதிகாரத்தை வீழ்த்த வேண்டும், சனநாயகம் வெல்ல வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். இது தான் அம்பேத்கரின் பிறந்தநாள் உறுதிமொழியாக எடுத்துக் கொண்டுள்ளோம்.

ஆயுஷ்மான் பாரத்தில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பாஜக ஆளும் மாநிலங்களில் இறந்து போன, உயிரோடு இல்லாதவர்களுக்கு ஒரே தொலைபேசி எண்ணில் ஆயிஷ்மான் பாரத் நிதி செலுத்தப்பட்டுள்ளது.

இலட்சக்கணக்கான பயனாளிகள் மூலம் ரூ. 7,50,000 கோடி ஊழலை பாஜக செய்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டவில்லை, சிஏஜி அறிக்கை சொல்கிறது. இதற்கெல்லாம் பாஜக பதில் சொல்ல வேண்டும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியையும் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

இப்படி தேர்தல் அறிக்கை ஒன்றை கூட நிறைவேற்றாத பாஜக அரசு இப்பொழுதும் தமாஷான ஒரு தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.

இந்தியில் ஜிம்லா என்று சொல்வார்கள். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியையே ஒன்றும் நிறைவேற்றவில்லை.

ஒவ்வொரு இந்திய குடிமக்கள் மீதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை மோடி சுமத்தி இருக்கிறார்.

இதுதான் அவர் சாதனை, இதுதான் அவர் தேர்தல் அறிக்கை”, என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!