சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டுவது குறிப்பிட்ட சமுதாய பள்ளியா அல்லது அரசு பள்ளியா??.. குழப்பும் சுவரொட்டிகள்..

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் நாளை (24/08/2020) திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிக்கு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்ட உள்ளார்.

இது சம்பந்தமாக ஊர் முழுவதும் இரண்டு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. ஒன்றில் நாடார் நடுநிலை பள்ளி என நாடார் உறிவின் முறை சமுதாயத்தினரும், அரசு பள்ளி என நகர் அஇஅதிமுகவும் சுவரொட்டி ஓட்டியுள்ளனர்.

இதில் எது உண்மை… கட்சிகாரர்கள் விளக்கம் அளிப்பார்களா??.

உதவிக்கரம் நீட்டுங்கள்..