மாதாந்திர ஆயிரம் ரூபாய் சலுகை கட்டண பாஸ் செல்லுபடியாகும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு !!!!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) மதுரை மண்டலம், மதுரை மூலமாக கடந்த ஜூன் மாதம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக ரூ .1,000 / – மாதாந்திர சலுகை கட்டண பாஸ் மற்றும் 1/3விகித சலுகை கட்டண பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பாஸ்கள் 16.06.2020 முதல் 15.07.2020 வரை பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. கொரோனா Covid – 19 தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பொதுப்பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, தற்சமயம் தமிழக அரசு 01.09.2020 முதல் பொது போக்குவரத்து இயக்கிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே ஜீன் 2020 மாதம் வழங்கப்பட்டுள்ள ரூ.1000/- சலுகை கட்டண மற்றும் 1/3 சலுகை கட்டண பாஸினை பொதுமக்கள் 01.09.2020 முதல் 15.09.2020 வரை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

மேலும் இனிவரும் காலங்களில் ஏற்கனவே வழங்கப்படுவது போல் பெரியார் ஆரப்பாளையம் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையங்களில் ரூ .1,000 / மாதாந்திர சலுகை கட்டண பாஸ் மற்றும் 1/3 சலுகை கட்டண பஸ்பாஸ்கள் 05.09.2020 முதல் வழங்கப்படும் என்பதை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ( மதுரை) லிட், மதுரை மண்டலத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..