புதிய தேசிய கல்விக் கொள்கையை(NEP) உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை SDPI கட்சி ஆர்ப்பாட்டம்..

புதிய தேசிய கல்விக் கொள்கையை(NEP) ரத்து செய்ய வலியுறுத்தியும்,  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு(EIA) அறிக்கையை கைவிடக் கோரியும்,   கிரிமினல் சட்டங்களில் ஆபத்தான திருத்தம் செய்வதை கைவிடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசம் தழுவிய பிரச்சாரம்! SDPI கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 25-முதல்-31 வரை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக இன்று(31/08/20) முஸ்லிம் பஜார்(லெப்பை கடை அருகில்) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் வீரகுல தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் கண்டன உரையாற்றினார்.

கீழக்கரை நகரத் தலைவர் ஹமீது பைசல் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது  கண்டன உரையாற்றினார்.

நிகழ்வின் தொடக்கத்தில்  நகர் இணை செயலாளர்  தாஜுல் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி (மேற்கு) துணைத்தலைவர் நவாஸ்கான் முன்னிலை வகித்தார். கீழக்கரை நகர் செயற்குழு உறுப்பினர் அஹமது நதீர் கண்டன கோஷம் எழுப்பினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் நகர் பொருளாளர் முஹம்மது அசாருதீன், இணைச் செயலாளர் அய்யூப் கான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கீழக்கரை நகர் அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டம் மற்றும் நகர் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிகழ்ச்சியை நகர் செயற்குழு உறுப்பினர் ஹுசைன் ரஹ்மான் தொகுத்து வழங்கினார். இறுதியாக நகரச் செயலாளர் பகுருதீன் அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..