Home செய்திகள் தென்காசி வ.உ.சி நூலகத்தில் சிறப்பு போட்டிகள்; பரிசுகள் வழங்கல்..

தென்காசி வ.உ.சி நூலகத்தில் சிறப்பு போட்டிகள்; பரிசுகள் வழங்கல்..

by ஆசிரியர்

தென்காசி வ.உ.சி நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு போட்டிகள் நடந்தது. இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. தென்காசி மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்ந்துள்ள வ.உ.சி வட்டார நூலகமும், ரோட்டரி கிளப் குற்றாலம் சக்தி இணைந்து வ.உ.சி 152-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவினை நடத்தியது. ரோட்டரி கிளப் குற்றாலம் சக்தி அனிதா ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செயலாளர் கல்யாணி முன்னிலை வகித்தார். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் (பணி நிறைவு), தலைமை ஆசிரியர் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், ரோட்டரி கிளப் குற்றாலம் சக்தி பொறுப்பாளர்கள் பொன்னி, முனைவர் பத்மா ராஜ், சிவராஜம், ராதா கிருஷ்ணம்மாள், நசீஹா ரகுமான், சுபேதார் கிருஷ்ணன், ஆர்வலர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளை நூலகர் சுந்தர் நன்றி தெரிவித்தார்.

ஓவிய போட்டியில் தென்காசி ஏழாவது வார்டு நகராட்சி பள்ளி ஸமீஹா முதல் பரிசு புல்லுக்காட்டு வலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ராகவேந்திரா, இரண்டாம் பரிசு சுரண்டை கிரியேட்டிவ் ஸ்கூல் பரிநிதா செல்லா, தென்காசி பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளி மோகன், காட்டுபாவா நடுநிலைப்பள்ளி ஷர்மிளா பானு ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர். கட்டுரை போட்டியில் நெடுவயல் சிவசைல நாத பள்ளி ஜோதி தமிழ் வழியிலும், தென்காசி இசக்கி வித்தியாஷரம் பள்ளி தேவ் தர்ஷன் ஆங்கில வழியிலும் முதல் பரிசு பெற்றனர். தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளி அமிர்தவர்ஷினி, நெடுவயல் சிவசைலநாத பள்ளி இம்ரானா இரண்டாம் பரிசும், டிடிடிஏ நடுநிலைப்பள்ளி அபிஷா, தென்காசி ஏழாவது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி சுடலை ராஜா மூன்றாம் பரிசும் பெற்றனர். பேச்சு போட்டியில் குற்றாலம் செய்யது மேல்நிலைப்பள்ளி அட்சயா முதல் பரிசும், செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முகமது சிராஜுதீன் இரண்டாம் பரிசும் பெற்றனர். வாசிப்பு பழக்கத்தினை ஊக்கு விக்கும் விதமாக போட்டிகளில் கலந்து கொண்ட 142 மாணவச் செல்வங்கள், பிரமுகர்கள், வாசகர்கள் என அனைவருக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் வ.உ.சி யின் புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை நூலகர்கள் ஜூலியாராஜ செல்வி, நிஹ்மதுனிஸா, வாசகர் வட்ட நிர்வாகிகள் சலீம் முகம்மது மீரான், குழந்தைஜேசு, முருகேசன் செய்திருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!