Home செய்திகள் இந்திய தொழிலதிபர், இந்திய தோல் தொழில் முன்னோடி ஏ.நாகப்பச் செட்டியார் நினைவு நாள் இன்று (மார்ச் 13, 1982)

இந்திய தொழிலதிபர், இந்திய தோல் தொழில் முன்னோடி ஏ.நாகப்பச் செட்டியார் நினைவு நாள் இன்று (மார்ச் 13, 1982)

by mohan

ஏ. நாகப்பச் செட்டியார் (A. Nagappa Chettiar) தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் மேலசிவபுரியில் ஆகஸ்ட் 6, 1915ல் பிறந்தார். இவர் ஈடுபட்ட தோல் வியாபாரம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஒரு பெரிய வணிகக் குழுமமாக வளர்ந்தது. வெளிநாட்டு தோல் ஏற்றுமதியில் ஈடுபட்ட இந்தியாவிலிருந்த இடைத்தரகர்களை நீக்குவதற்கு இவரது முயற்சிகள் பெரிதும் உதவின. பாதியாக இறுதி செய்யப்பட்ட தோல் பொருட்களை ஏற்றுமதி செய்வதை பிரதானமாக கருதியக் காலத்தில், முழுமையாக இறுதி செய்த தோல்பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற கருத்துமுறையில் நாகப்பச் செட்டியார் முன்னோடியாக விளங்கினார்.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதரவுடன் இவர் முன்நின்று ஏற்பாடு செய்த வருடாந்தர தோல் கண்காட்சி ஆசியாவிலேயே மிகப்பெரிய தோல் பொருட்கள் கண்காட்சியாக வளர்ச்சியடைந்தது. இந்தியாவின் தோல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் நாகப்பச் செட்டியார் இருந்தார். சமுதாயத்திற்கு இவர் ஆற்றிய தொண்டுகளை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசாங்கம் 1967 ஆம் ஆண்டு நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கியது. ஓர் இந்திய தொழிலதிபராகவும், இந்திய தோல் தொழில் முன்னோடிகளில் ஒருவராகவும் இருந்த நாகப்பச் செட்டியார் மார்ச் 13,1982ல் இயற்கை எய்தினார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com