மன்னார் வளைகுடாவில் கொட்டப்படும் அனல் மின் நிலைய சாம்பலால், அரிய வகை உயிரினங்கள், மற்றும் நிலத்தடி நீர், பாதிப்பு – அகில இந்திய உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சசி தரூர் தூத்துக்குடியில் பேட்டி..

மன்னார் வளைகுடாவில் கொட்டப்படும் அனல் மின் நிலைய சாம்பலால், அரிய வகை உயிரினங்கள், மற்றும் நிலத்தடி நீர், பாதிக்கப்படுகிறது

தூத்துக்குடி தனியார் ஹோட்டலில் அகில இந்திய உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர் சங்கம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடியில் உள்ள அனைத்து கட்டுமான சாம்பல் செங்கல் நிறுவனத்தின் நிறுவனர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் மன்னார் வளைகுடாவை ஒட்டியுள்ள தமிழக அரசின் தூத்துக்குடி அனல்மின் நிலையம் தனது சாம்பல் கழிவுகளை கடலில் கொட்டுவதால் மன்னார் வளைகுடாவின் அரிய வகை நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது, என அகில இந்திய உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சசி தரூர் கூறினார்.