கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி சுகாதார கல்வி பயிற்சி முகாம் நாடார் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜகோபாலன் தலைமை வகித்தார்.பள்ளிச் செயலாளர் கண்ணன, ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் சம்பத்குமார், ரோட்டரி சங்கத் தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி சுகாதார பயிற்றுனர் முத்துமுருகன் சோப்பு போட்டு கை கழுவும் முறை குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்தார்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவிமாணிக்கம்,லட்சுமணபெருமாள், சீனிவாசன், பத்மநாபன்,ஆவுடையப்பன், வையாலிமுத்தையா பள்ளிக் குழு உறுப்பினர் பொன்ராமலிங்கம், எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி செயலாளர் கண்ணன், வழக்கறிஞர் செல்வம், ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிகளை ஆசிரியை சகாயகலாவதி தொகுத்து வழங்கினார்.முடிவில் ஆசிரியர் டாபின் மேரி நன்றி கூறினார்.
செய்தி, அஹமது
படம், சாதிக்
You must be logged in to post a comment.