பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தை தூய்மைபடுத்திடவும், அடிப்படை வசதிகளை சரிசெய்திடவும் மக்கள்வழிகாட்டி இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை..

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி, பாவூர்சத்திரம் பேருந்துநிலையம், இங்கு சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது, இதனால் அதிக துர்நாற்றம் வீசுகிறது, இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் இந்த சாக்கடை கழிவுநீர் வாய்க்காலை சிற்றுந்துகள் நிற்கும் மேற்கு பகுதி வழியாக அமைத்தால் பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசாமல் தடுக்கலாம். பஸ்ஸ்டாண்டில் அமைக்கப்பட்டிருக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இயந்திரம் பழுதடைந்து நீண்ட நாட்களாகியும் சரிசெய்யப்படவில்லை.

ஆழ்குழாய் தண்ணீர் சின்டெக்ஸ் டேங்க் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லை, மேலும் இலவச பெண்கள் கழிப்பிடம் பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லை.

எனவே மேற்கண்ட குறைகளை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுநலன் கருதி மக்கள்வழிகாட்டி இயக்கம் சார்பில் M.ஞானசேவியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்