வாலாஜா அருகே கோஷ்டிகளுக்கு இடையே மோதல்- 4 பேரிடம் விசாரணை..

வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் ஷாம்குமார் (21). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது ஜெயராம்பேட்டை பாவானி அம்மன் கோவிலை சேர்ந்த அரி என்பவர் மணிகண்டன் மீது மோதுவது போல் பைக்கில் சென்றுள்ளார். இதனை மணிகண்டன் அரியிடம் தட்டி கேட்டார் அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதனை கண்ட அரியின் நண்பர்கள் வேலு, யோகேஸ்வரன், ஆகியோர் வந்து மணிகண்டனை சரமாறியாக தாக்கினர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ராணிப்பேட்டை காவலருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி:- வாரியார், வேலூர்