இராமநாதபுரம், ஜன.11 – அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி இடையே ஆடவர் செஸ் போட்டியில் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி 4 ஆம் இடம் பிடித்தது. அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்ககிடையேயான ஆடவர் செஸ் போட்டி பரமக்குடி அரசு கலை கல்லூரியில் நடந்தது. இதில் அழகப்பா பல்கலை இணைப்பு பெற்ற 20 கல்லூரிகள் பங்கேற்றன. இறுதி சுற்று நிறைவில் 4 ஆம் இடம் பிடித்த கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு அழகப்பா கலை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் அசோக் குமார், அழகப்பா பல்கலை உடற்கல்வி இயக்குனர் செந்தில் குமரன், பரமக்குடி அரசு கலை கல்லூரி முதல்வர் சிவக்குமார் (பொ)ஆகியோர் பரிசு வழங்கினர். நான்காம் இடம் பிடித்த வீரர்கள், உடற்கல்வி இயக்குனர் தவசி லிங்கம் ஆகியோரை முஹமது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப், செயலர் ஷர்மிளா, நிர்வாக இயக்குனர் ஹமீத் இப்ராஹிம், இயக்குனர் ஹபீப் முஹமது, செயல் திட்ட அலுவலர் விஜயகுமார் , முதல்வர் ராஜசேகர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
57
You must be logged in to post a comment.