சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள பழங்கால பள்ளியை காக்க களம் இறங்கிய முஸ்லிம் சமுதாயம்..வீடியோ காட்சிகள்..

சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் பாதுகாப்பற்ற சூழல் என்ற காரணத்தை கூறி தமிழக அரசு மவுண்ட் ரோடு ஸ்பென்சர் அருகில் அமைந்துள்ள அரசினர் மதரஸா-இ-ஆஸம் மேல் நிலை பள்ளியையும் அதன் உள்பகுதியில் அமைந்துள்ள தொழுகைப் பள்ளியையும் இன்று (08-12-2017) நள்ளிரவு இடிக்க முற்பட்டு வருகிறது.  இங்கு ஏழை மாணவர்கள் தங்கி படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த இடம் கடந்த காலத்தில் ஆற்காடு நவாபால் இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்ட இடமாகும்.  கடந்த சில வாரங்களாக பேச்சு வார்த்தை நடந்து வரும் இந்த சூழலில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பள்ளியை இடிக்க முற்றபட்ட தமிழக அரசை கண்டித்து தற்போது மவண்ட் ரோடில் இஸ்லாமிய சமுதாய மக்கள் கண்டனத்தை தெரிவிக்கும் வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தற்சமயம் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய லீக், த.மு.மு.க, வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா போன்ற பல அமைப்புகளை சார்ந்த தொண்டர்களும், தலைவர்களும், இன்னும் பல இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர்களும் போராட்ட களத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இஸ்லாமிய சமுதாயத்தின் வீரியத்தை கண்ட அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு இறங்கியுள்ளார்கள். டிசம்பர் 6ல் இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையுடன் வீரியத்தை காட்டததால் அன்று நம் சமுதாயம் பாபர் மசூதியை இழந்தது, இப்பொழுதும் நாம் மௌனம் காத்தால் டிசம்பர் 8ல் இந்த பழங்கால பள்ளியையும் இழக்க நேரிடும்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..

1 Comment

Comments are closed.