மனித நேயமற்ற மிருக செயலுக்கு மதத்தின் சாயம்.. அடக்க வேண்டிய அரசாங்கம் அடக்கி வாசிப்பதால் சாமானியனும் கொல்லப்படும் அவலம்…

கடந்த டிசம்பர்  6 அன்று மேற்கு வங்கத்தை சார்ந்த அப்சருல் (வயது 50) ராஜஸ்தானில் கூலி வேலை பார்த்து வந்தவரை சம்புலால ரேகர் என்பவன் மிருகத்தனமாக அப்சருலை கோடாரியால் வெட்டி,உயிரோடு எரித்து கொலை செய்துள்ளான். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அக் கொடூரன் கொலைச் சம்பவத்தை வீடியோ பதிவு செய்து இணையத்திலும் பதிவு செய்துள்ளான். அவன் செய்த கொலையை ஒரு மதத்தின் பெயரில் நியாயப்படுத்துவது மூலம், அந்த மதத்திற்கே கரையை ஏற்படுத்தியுள்ளான். அதாவது, கொலை செய்யப்பட்டவர் இந்து பெண்ணுடன் தொடர்வு வைத்துள்ளதாகவும் அதனால் கொலை செய்ததாகவும் அந்த கொலையாளி பேசியுள்ள வீடியோவில் நியாயப்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

அதைத் தொடர்ந்து மற்றொரு வீடியோவில் அக்கொடூன் “லவ் ஜிகாத்“ செய்யும் முஸ்லிம்களுக்கு இதே நிலைமை தான் நீடிக்கும் என்றும், இந்து பெண்மனியை லவ் ஜிகாதிலிருந்து பாதுகாக்கவே நான் கொலை செய்தேன் என்று எச்சரிக்கை விடுவது போல் உள்ள காட்சிகளும் அடங்கியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து காவல் துறை கொலையாளியை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.

இது குறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஓ.பி.கல்ஹோத்ரா கூறுகையில்: இது ஒரு கொடூரமான கொலையாகவும்,இது போன்ற கொலையை இயல்பான மனிதரால் செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு கொலை செய்யப்பட்டு படமும் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் வேதனையான விசயம், இல்லாத “லவ் ஜிகாத்” எனும் சொல்லை இன்று ஊடகங்கள் வரை ஒரு செயல்பாடாக உருவகப்படுத்தியதே இது போன்ற கொலைகளுக்கு காரணம். மதத்தின் பெயரால் சாமானிய மனிதன் கொல்லப்படுவதை இனியும் ஆளும் வர்க்கம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

1 Comment

  1. We dont know were we living…
    Thereis no security for citizens
    We all com in to one cricle n have to take action on it…
    Otherwise our all life will b a moral story as “lion n cows”
    ..

Comments are closed.