கின்னஸ் சாதனை புரிய காத்திருக்கும் மாணவன்… உதவி தேடி நல்லுல்லங்களுக்காக காத்திருக்கிறான்..

தர்மபுரி குமாரசாமிபேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீட்டிலேயே துணி தைக்கும, தொழில் பார்க்கும் செல்வம். இவருடைய மகன் கவியரசு தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.  இவர் நான்காம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே பள்ளியில் ஆசிரியரியர்கள் கரும்பலகையில் எழுதிவிட்டு தூக்கி எறியும் சாக்பீஸ் துண்டுகளை வைத்து கத்தி, கிரீடம் போன்ற சிற்பங்களை செய்ய தொடங்கியுள்ளார்.

பின்னர் அதையே ஏன் தனி திறமையாக வளர்த்து உலக சாதனையாக படைக்க கூடாது என்ற எண்ணத்துடன் அந்த திறமையை வளர்த்து பள்ளி மற்றும் கல்லூரி அளவில் பல சாதனைகள் செய்துள்ளார்.  இதன் தொடர்ச்சியாக ஒரு இஞ்ச் சாக்பீஸ் அளவில் முருகன், மதுரை மீனாட்சி அம்மன், புத்தர் சிலை, ஆயிரங்கால் மண்டபம், தாமரை மல்ல், சங்கிலி, பத்து தலை ராவணன என பல் வேறு சிற்பங்களை தொடர்ச்சியாக வடித்து சாதனை படைத்துள்ளார்.

இது போன்ற சாதனைகள் தனித்தன்மையுடையதாகும்.  இம்மாணவன் உலக அளவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முறையான வழிகாட்டுதலிக்காகவும், பொருளாதார உதவிக்காகவும் காத்திருக்கிறான்.  இம்மாணவனுக்கு வாழ்த்து கூறவும், வழி காட்டி உதவி விரும்பினால் 7397541742 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.