மண்டல, மாநில டேக்வாண்டோ போட்டி : பதக்கம் குவித்த மாணவர்களுக்கு பாராட்டு…

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் 2018-19 கல்வியாண்டு மண்டல அளவிலான டேக் வோண்டா  போட்டி, இராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்., பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை , விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் 500 பேர் பங்கேற்றனர். நேஷனல் அகாடமி  பள்ளி தாளாளர் டாக்டர்  செய்யதா , முதல்வர் ராஜ முத்து துவக்கி வைத்தனர். சர்வதேச நடுவர் ராமலிங்க பாரதி , தேசிய நடுவர்கள் பாஸ்கர், சங்கர், மாநில நடுவர்கள் தீபக், கர்ணன், முனியசாமி,   ஆகியோர் பணியாற்றினர்.

இப்போட்டியில் இராமநாதபுரம் நேஷனல் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் அபினேஷ் சர்மா  முதலிடம் , சஞ்சய் குமார், ஹரீஸ், முகேஷ் குமார் ஆகியோர் தங்க பதக்கம், முகமது உமர் முக்தார், கபின், விஜய சாரதி ஆகியோர் வெள்ளி பதக்கம், அப்துல் ராஸித் , சாரு நித்தீஷ் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். மண்டல அளவிலான போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணவர்கள் டிச., 4 ,5 ,6  தேதிகளில் திருப்பூரில் நடந்த மாநில போட்டியில் பங்கேற்றனர். இதில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவர் சஞ்சய் குமாரை பள்ளி தாளாளர் டாக்டர் செய்யதா, முதல்வர் ராஜ முத்து, ஆலோசகர் சங்கரலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.