Home செய்திகள் மதுரை நகரில் சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை..

மதுரை நகரில் சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை..

by ஆசிரியர்

மதுரை: மதுரை நகரில் பல இடங்களில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் மிகவும் இடையூறாக உள்ளதாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டத்தில், பல ஊர்களின் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால், இருசக்கர வாகனத்தில் வருவோருக்கும், நடந்து செல்வோருக்கும் மிகவும் இடையூறாக உள்ளது .

மேலும் ,இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, கால்நடைகள் சாலைகளை குறுக்கிடுவதால், வாகனத்தில் செல்வோர் இடறி கீழே விழுகின்ற நிலையும் ஏற்படுகிறது. அத்துடன் சாலைகளில், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது கால்நடை குறுக்கிடும்போது, விபத்தும் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மேலும், பிரேக் பிடிக்கும் போது, நான்கு சக்கர வாகனங்கள் தலை குப்பிற கவிழும் நிலையும் ஏற்படுகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில், சாலைகளை சுற்றித் தெரியும் கால்நடைகளை, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி துறையினர் பிடித்து மாட்டு உரிமையாளருக்கு அபராத விதிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து கால்நடை உரிமையாளரிடம் அபராதம் வசூலித்தனர்.

மதுரை நகரை பொருத்தமட்டில், மதுரை நகரில் அண்ணா நகர், கே.கே. நகர், புதூர், மூன்று மாவடி, பழங்காநத்தம்,  வண்டியூர், கருப்பாயூரணி, மேலமடை, ஆழ்வார் புரம், கோரிப்பாளையம், மதிச்சியம், தல்லாகுளம், ஜெய்ஹிந்திபுரம், செல்லூர், மதிச்சியம், தெற்கு ஆவணி மூல வீதி,  ஆகிய பகுதிகளில் கால்நடைகள் ஆனது சாலைகளில் சுதந்திரமாக சுற்றித் திருவதைக் காணமுடிகிறது.

இது குறித்து, இப் பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மதுரை மாநகராட்சி அதிகாரி முறையிட்டும், இதை கட்டுப்படுத்த ஆர்வம் காட்டவில்லையாம்.  மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் மற்றும் சுகாதார அலுவலர்கள்ம துரை நகரில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து, மாடு உரிமையாளருக்கு அபராத விதிப்பதுடன், சாலைகள் திரிய அனுமதிக்க கூடாது என, இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மதுரை புறநகர் பகுதிகளான, சமயநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், மேலூர் ஆகிய பகுதிகளிலும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதாக அப்பொழுது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, நகராட்சி மற்றும் பேரூராட்சி துறையினர், வருவாய்த் துறையினர் இணைந்து கால்நடைகளை பிடித்து உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com