கீழக்கரை நகராட்சியை கண்டித்து மெழுகுவர்த்திகள் ஏந்தி போராட்டம்..

கீழக்கரை நகராட்சியில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் எனும் உயர் கோபுர விளக்குகள் ஒவ்வொன்றும் ₹ 5லட்சம் செலவில் 9 விளக்குகள் நகரெங்கும் அமைக்கப்பட்டது. இதில் ஏர்வாடி முக்கு ரோட்டில் அமைந்துள்ள ஒன்றை தவிர 8 விளக்குகளும் பல மாதங்களாக எரியாமல் இருள் மண்டி கிடக்கிறது.

இதை சரிசெய்ய நகராட்சியில் கட்சிகள் சங்கங்கள் சமூக அமைப்பு மற்றும் பொதுமக்கள் பலரும் புகார் மனு பல தந்தும் பலனில்லை. இதை கண்டித்து அனைத்து கட்சியினர் ஒன்றினைந்து தெற்குத் தெரு சங்கம் அருகே மெழுகுதிரி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எட்டப்பட்டது.

அதன்படி, இன்று 08.30 மணி அளவில் அனைவரும் வந்தபின் தேமுதிக கட்சி சார்பாக பந்தே நவாஸ் அவர்களும், நகர் நல இயக்கம் சார்பாக பசீர் மரைக்கா அவர்களும், பார்வேர்ட் பிளாக் சார்பாக ரகுமான் அவர்களும், தமுமுக சார்பாக பாதுஷா அவர்களும், தெற்கு தெரு சங்கம் சார்பாக லாகீது கான் அவர்களும், SDPI சார்பாக சித்தீக் அவர்களும், திமுக சார்பாக பசீர் அவர்களும் சிறிது நேரம் நகராட்சியை கண்டித்து பேசினார்கள்.

அதன் பின் அனைவரும் கோசங்களை எழுப்பினர்.இறுதியாக தெற்கு தெரு ஜமாத் சார்பாகவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மக்கள் டீம் காதர் வந்திருந்த அனைவருக்கும், காவல் துறையினருக்கும், பத்திரிக்கை துறை அன்பர்களுக்கும் நன்றிதனை தெரிவித்து நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

தகவல்.: மக்கள் டீம் :

#Paid Promotion