Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் போலீசாருக்கு உடலில் அணியும் கேமரா…

இராமநாதபுரம் போலீசாருக்கு உடலில் அணியும் கேமரா…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் பயன்பாட்டுக்கென உடலில்  அணியும் புதிய நவீன ரக 21 கேமராக்களை மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் இ.கார்த்திக்  வழங்கினார். 

இந்த கேமராக்களை தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு கடமையாற்றும்  போலீசார் அவர்களை சுற்றிய நிகழ்வுகளை எளிதாக பதிவு செய்ய  முடியும். மேலும், வாகன சோதனை, பகல் மற்றும் இரவு ரோந்து, போக்குவரத்து கட்டுப்பாடு,  மனு விசாரணை, கூட்டங்களை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை பதிவு செய்து  கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ, ஆடியோ, போட்டோ ஆகியவற்றை பதிவு  செய்யக்கூடிய வசதி உள்ளதால் காவல் துறை பணியில் வெளிப்படை தன்மை  நிலவும். முக்கிய குற்றவாளிகள் மற்றும் வாகனத்தின் பதிவு எண்களை கண்டு  கொண்டு நடவடிக்கை எடுக்க பயன்படும். போலீசாருக்கு மூன்றாவது  கண்ணாக அமையும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்கள், 11 காவல்  நிலையங்கள், 3 போக்குவரத்து காவல் நிலையங்கள் என உடலில்  அணியும் புதிய நவீன ரக 21 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com