பெற்ற பிள்ளைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை…

இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் வடக்கு தெரு மாரிமுத்து, 33. டீ கடையில் வேலை பார்த்தார். இவருக்கு 10 வயது, 12 வயது மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு மாரிமுத்து அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் . இதனால், மாரிமுத்துவை அவரது மனைவி கண்டித்தார். போலீசில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவேன் மனைவி, பிள்ளைகளுக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இது பற்றி தகவலறிந்த சைல்டு லைன் குழந்தைகள் நலக்குழு சார்பில் கீழக்கரை மகளிர் போலீசில் 01.02.2020 அன்று புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், காவல் ஆய்வாளர் திலகராணி வழக்கு பதிந்து மாரிமுத்துவை கைது செய்தார். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி விசாரணை இன்று முடிந்தது. பெற்ற மகள்களை பாலியல் தொல்லை கொடுத்த மாரிமுத்து, சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுபத்ரா தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட 2 மகள்களுக்கும் தலா 1.5 லட்சம் வீதம் மாரிமுத்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.