விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த தமிழ் விவசாயிகள் சங்கம் தற்போது அரசியல் களத்திலும் தனது பங்களிப்பை செய்துள்ளது.
அந்த வகையில் தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மற்றும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சாத்தூர் ஆகிய தொகுதிகளில் தமிழ் விவசாயிகள் சங்கமும் களம் இறங்குகிறது.
இதில் முதல் கட்டமாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேட்பாளராக டி.எஸ் நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
விவசாயிகள் அனைவரும் ஒருமித்த குரலுடன் விவசாயிகள் ஓட்டுக்கள் வீணாகாமல் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் டி எஸ் நடராஜன் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும்,விவசாயியை சட்டமன்றத்துக்கு அனுப்ப ஒற்றுமையுடன் அணி திரள வேண்டும் எனவும் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.