கோவை- ஆனைகட்டியில் தமிழக அரசு அறிவித்த 2000 ரூபாய் திட்டத்திற்கு பணம் வசூலித்த இடைத்தரகர்கள்..

கோவை மாவட்டம், ஆனைகட்டி பழங்குடியினர் மக்களிடம் தமிழக அரசு அறிவித்த, இரண்டாயிரம் ரூபாய் வழங்க பணம் வசூலித்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி, மலைக் கிராமங்களான சின்ன ஜம்புகண்டி, பெரிய ஐம்புகண்டி, கூட்டுபுளி காடு மற்றும் ஆலமரம் மேடு ஆகிய கிராமங்களைச் சார்ந்த 236 குடும்பங்களிடம் தலா 50 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலரிடம் 100 ரூபாய் வரை வசூலித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் பேசியபோது, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.