தொண்டி அருகே அரசு விரைவு பேருந்து சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதல் 3 பேர் பலி 3 பேர் படுகாயம்..

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே அரசு விரைவு பேருந்து மோதியதில் சரக்கு வாகனத்தில் சென்ற பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு விரைவு பேருந்தும், ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி சென்ற சரக்கு வாகனமும் இன்று (09.3.19) அதிகாலை 2 மணி அளவில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த மணக்குடி ஆறுமுகம்
கருப்பையா 25, தொண்டி கிழக்கு தெரு அமீர் அலி மகன் செய்யது இப்ராஹீம் 30, தொண்டி வடக்கு தெரு ஷேக் உதுமான் பிச்சை ராவுத்தர் மகன்அ ப்துல் கலாம் ஆசாத் 23 ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இக்கோர விபத்தில்தொ ண்டி கிழக்கு தெரு முகமது ராசிக் மகன் முகம்மது ரிபாக் 24, தொண்டி வடக்கு தெரு சகுபர் மைதீன் மகன்மு கமது அப்ரித் 30, முகமது ஷேக் மகன் அஸ்பாக் ஆகியோர் படுகாயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 3 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப் பட்டனர். இறந்தவர்களின் உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து காரணம் குறித்து தொண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.