Home செய்திகள்கீழக்கரை செய்திகள் புதுமடம் பூன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் களையரங்க திறப்பு விழா !

புதுமடம் பூன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் களையரங்க திறப்பு விழா !

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் புது மடத்தில் பூன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் 24ஆம் ஆண்டு ஆண்டு விழா மற்றும் களையரங்க திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் நிறுவனர் ஹாஜி N.K நாகூர் இப்ராஹிம் ஆலிம் தலைமை தாங்கினார். கடலாடி சங்கீதா மெட்ரிக் பள்ளி தாளாளர் சேகர் முன்னிலை வகித்தார்.பள்ளி நிறுவனரின் நண்பர் கலிபுல்லாஹ் மற்றும் v-bistro குழும நிறுவனர் ராஜா முகம்மது ஆகியோர் கலை அருங்காத்தை திறந்து வைத்து சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சரண்யா பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். மாநில தனியார் பள்ளிகளின் நல சங்க பொதுச் செயலாளர் சதீஷ் , கௌரவ ஆலோசகர் அப்துல் பாசித் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட தனியார் பள்ளிகள் நலச்சங்க தலைவர் சாமிநாதன் நினைவு பரிசு வழங்கினர், மண்டபம் ஒன்றிய நர்சரி பிரைமரி நலச்சங்க தலைவர் பெஸ்கி , தமிழ்நாடு நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி நலச்சங்க மாவட்ட செயலாளர் நூருல் கரீம் , மாவட்ட உதவி செயலாளர் நஸ்ருதீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற ஊழியர் அல் ஆல்ட்ரின் வில்பர்ட் ராஜ் நினைவுப் பரிசு வழங்கினார்.உச்சிப்புளி ரோட்டரி முன்னாள் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜெயபாலன் மற்றும் ரோட்டரி முன்னாள் செயலாளர் டாக்டர் தாமரை செல்வன், இருமெனி இண்டர்நேஷனல் பள்ளி நிர்வாக இயக்குநர் நைனா முஹம்மது,பள்ளி தாளளர்கள் வெண்மதி நாதன், ரமேஷ், ஹனீபா, ஷா நவாஸ் கான், சபீர் முஸ்தபா, டாக்டர் சலீம், மான்சிர், முஹம்மது அமீன், முஹம்மது அஸ்பர், ரியாஸ் கான். பாம்பே டையிங் உரிமையாளர் ஜாஃபர் , செறிஸ்டர், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கினர். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியர்கள் சிறந்த முறையில் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் விருந்தினர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். இவ்விழாவில் புதுமட கிராம மக்கள் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!