155
ராமநாதபுரம் அருகே உள்ள ரெகுநாதபுரத்தை அடுத்த மங்கம்மா சாலை என்ற ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜாவும் வெள்ளையன் வலசையைச் சேர்ந்த லாவண்யா என்ற இளம் பெண்ணும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் படித்து வரும் மாணவியான லாவண்யா அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜாவை காதலித்து வந்ததாகவும் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவி காதலனுடன் விஷம்அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment.