தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு!.. வீடியோ..

தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு. மத்திய தரக்கட்டுப்பாடு குழுவினர்களின் தேர்வில் தேசிய அளவில் 8 வது இடத்தைப்பிடித்தது.

தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்ட ஒரே காவல் நிலையம் இதுவாகும்.  ஆண்டுக்கு ஒரு முறை தேசிய கட்டுப்பாட்டு அலுவலர் குழுவால் காவல் நிலையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி காவல் நிலையங்களில் ஆவணங்கள் சரிபார்ப்பு, சுகாதாரம், கட்டமைப்பு , காவல் நிலைய கோப்புகள் (ம) அவற்றின் பராமரிப்புகள், வழக்கு மனு சம்மந்தமான உடனடி தீர்வு, ஆகியவற்றின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்படும். அதன்படி 2018ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக பெரியகுளம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். பெரியகுளம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இங்கு காவல் ஆய்வாளராக உள்ள சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்

 செய்தி:-  ஜெ. அஸ்கர், திண்டுக்கல்

#Paid Promotion