Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரை பகுதியில் அரசு விதி முறைகளுடன் (பேக்கரி ) அடுமனை பணிகள் துவங்கியது…

மதுரை பகுதியில் அரசு விதி முறைகளுடன் (பேக்கரி ) அடுமனை பணிகள் துவங்கியது…

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் பகுதியில் தமிழக அரசு உத்தரவின்படி நேற்று (16/04/2020) முதல் செயல்படத் துவங்கியது. மதுரையில  உள்ள தனியார் பேக்கரியில் முற்றிலும் இயந்திர மயமாக்கப்பட்ட அடுமனையில் மாவு கலவை செய்வது முதல் பிஸ்கட் போன்றவை இயந்திரம் மூலம் அச்சிடப்பட்டு வரிசையாக ரேக்களில் அடுக்கப்பட்டு அவை ஓவனில் வைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு வேலை செய்யும் பெண்களுக்கு சானிட்டரிஸ் உபயோகம் செய்து கைகள் முகம் கழுவிய பின்பு முக கவசம், கையுறை வழங்கப்பட்டுள்ளது. இங்கு தயாராகும் பிஸ்கட்டுகள் சுகாதாரமான முறையில் தயார் செய்யப்பட்டு பேக் செய்யப்படுகிறது.. பின்னர் அவை மதுரையில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள கடைளுக்கு அனுப்பி விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பேக்கரி உரிமையாளர் வேல்முருகன் கூறுகையில், பிஸ்கட் கம்பெனி குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அதாவது காலை 6 மணி முதல் ஒரு மணி வரை நடத்த வேண்டும் என்று அரசு அனுமதித்துள்ளது. ஆனால் இங்கு வேலைக்கு பெண்கள்தான் அதிகம் வருகின்றனர். அவர்கள் வீட்டில் வேலை செய்து அதன்பின் வருவதால் 9 மணிக்கு மேலே தான் வருகின்றனர்.  இதனால் சற்று சிரமம் ஏற்படுகிறது. அரசு கூடுதலாகவோ நேரம் ஒதுக்கினாலோ அல்லது காலை 9 மணி முதல் மாலை 4 வரை நேரம் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் என்று அரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!