Home செய்திகள் கேரளா, மங்களூருவில் தவிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள் தமிழக அரசு மீட்க நடவடிக்கை கோரி மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர் கோரிக்கை

கேரளா, மங்களூருவில் தவிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள் தமிழக அரசு மீட்க நடவடிக்கை கோரி மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர் கோரிக்கை

by mohan

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் மண்குண்டு, மேதலோடை தோப்புவலசை, நாகாச்சி, அகஸ்தியா் கூட்டம், பிள்ளைமடம் பகுதி மீனவர் 65 போ் , கேரளா மாநிலம் கண்ணூா் அனிக்கல் துறைமுகத்தில் கடந்த 3 மாதங்களாக தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.இந்நிலையில் மாா்ச் 25 முதல் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அனிக்கல் துறைமுகத்துக்கு கரை திரும்பிய அவா்கள் இராமநாதபுரம் திரும்ப முடியாமல் துறைமுகத்தில் தங்கினா். இதுபோல் கர்நாடகா மாநிலம் மங்களூரி்ல் 220 பேர், ஹட்பே எனுமிடத்தில் 100பேர் (கும்பரம், தலைத்தோப்பு பகுதி மீனவர்கள்) தங்கி உள்ளனர். தற்போது, 2ஆம் நிலை ஊரடங்கு உத்தரவு ஏப்.30 வரை நீட்டிப்பால், வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்தை விட்டு அவா்கள் வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். தேவையான அடிப்படை வசதிகள் , போதிய உணவு கிடைக்காமல் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தவித்து வருகின்றனர், அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி , தி.மு.க, மாவட்ட பொறுப்பாளர், காதர்பாட்சா முத்துராமலிங்கம் , மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களை மீட்க வேண்டும் என மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!