Home செய்திகள் பாபர் மசூதியும், ராமர் கோவிலும் ஓர் ஆய்வு ரிப்போர்ட்..

பாபர் மசூதியும், ராமர் கோவிலும் ஓர் ஆய்வு ரிப்போர்ட்..

by Askar

பாபர் மசூதியும், ராமர் கோவிலும் ஓர் ஆய்வு ரிப்போர்ட்..

எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில்தான் துளசிதாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார்.

1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசிதாசரும் வாழ்கிறார்.

இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை என்பது தான் உண்மை.

தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ்கிருத மொழியில்தான் இருந்தது,

இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார்.

இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசிதாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்புதான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.

இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளரும் ஆவார்.

இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவிலும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528 ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்
.
எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறுவது முழுப் பொய் என்பது இதன் மூலமும் நிரூபணமாகிறது.

பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார்.

குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்கமாட்டார்.

அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.

பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்துக் கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.

பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை.

ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.

பாபருக்குப் பின் அவரது மகன் ஹுமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் தி கிரேட் அக்பர் ஆட்சிக்கு வருகிறார்.

இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, ‘தீனே இலாஹி’ என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை.

”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பார்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே…!

வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும் சரி, நாடு விடுதலை அடைந்த நேரத்திலும் சரி ”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை.

இந்து முஸ்லிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்த காலத்தில் கூட இது போன்ற பிரச்சினை எதுவும் எழவில்லை.

ஆனால், 1949 டிசம்பர் 23 ல் சிலைகளைப் பள்ளிவாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக்கவில்லை..

பாபர் மசூதியை இடித்து அதன்மேல் தான் கோவில் கட்டப்பட்டுள்ளது ..!
மாறாக கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப்படவில்லை…!!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com