Home செய்திகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு..

பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு..

by ஆசிரியர்

குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க தேனி மாவட்ட காவல்துறையினர் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்தும் விழிப்புணர்வு வழங்கியும் வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின் பேரில் பொதுமக்களின் சேவையில் காவல் துறை 24 மணிநேரமும் தயாராக உள்ளது என்பதை அறியும் வகையில் வாரந்தோறும் கல்லூரிகள்¸ பள்ளிகள்¸ குழந்தைகள் காப்பகங்கள், கிராமங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை தேர்ந்தெடுத்து அங்கு சென்று POCSO ACT, KAVALAN APP குறித்த விழிப்புணர்வை அனைத்து காவல் நிலைய பெண் காவலர்களும் செய்து வருகின்றனர்.

மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், சிலருக்கு தற்கொலை செய்துகொள்ளக்கூடிய எண்ணப்போக்கினை மாற்றும் வகையிலும், இளம் வயது திருமணங்களை தடுக்கும் வகையிலும், விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

செய்திகள்:- பால்பாண்டி, தேனி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!