கீழக்கரை வடக்குத் தெரு அல்மதரஸத்துல் முஹம்மதியா (NASA) இஸ்லாமியா கண்காட்சி, ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா..

கீழக்கரை வடக்குத் தெரு அல்மதரஸத்துல் முஹம்மதியா (NASA) சார்பாக 13/01/2019 அன்று முகைதீனியா பள்ளி வளாகத்தில்  இஸ்லாமியா கண்காட்சி, ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மதரஸா மாணவர்கள் தங்களுடைய படைப்பை மிகவும் சீரிய சிந்தனையுடன் மக்களின் பார்வைக்காக வைத்திருந்தனர்.  பின்னர் இந்த நிகழ்வின் முக்கிய நிகழ்வாக ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெற்றது.  இந்த நிகழ்வை மதரஸாவின் முதல்வர் அஹமது ஹுசைன் ஆசிஃப் தொகுத்து வழங்கினார்.  இந்நிகழ்ச்சி மதரஸா மாணவர்கள் முஹம்மது இஷாம் மற்றும் ஜியாத் அஹமது கிராத்துடன் தொடங்கியது.  இந்நிகழ்ச்சிக்கு நாசா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மஹ்ரூஃப் தலைமை தாங்கினார்.  அறிமுக உரையை செய்யது முஹம்மது ஜமாலி, ஆசிரியர், அல் மதரஸத்துல் முஹம்மதியா வழங்கினார்.

இந்நிகழ்வின் சிறப்புரையை CMN.சலீம், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க தலைவர் மற்றும் சமூக நீதி முரசின் ஆசிரியர் வழங்கினார்.  அவருடைய உரையில் இஸ்லாமிய வரலாறு மற்றும் இஸ்லாமிய பார்வையில் குழந்தை வளர்ப்பு பற்றி பொது மக்கள் மத்தியில் தெளிவாக விளக்கினார்.

மேலும் இந்நிகழ்வில் நாசா ஆம்புலன்ஸ் மற்றும் பிற தளங்களில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களின் பணியை கௌரவப்படுத்தும் வகையில் ஓட்டுனர் பர்வீன், அசாருதீன் மற்றும் பலருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.