“இணையதள பாதுகாப்பு” விழிப்புணர்வு நிகழ்ச்சி…

மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., உத்தரவுப்படி இன்று “இணையதள பாதுகாப்பு” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.செந்தில் இளந்திரையன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி மதுரை மாநகர் லேடி டோக் கல்லூரி மாணவிகளுக்கு இணையதள குற்றங்கள் பற்றியும் அவற்றிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்வது என்பது பற்றியும், சமூக வலைத்தளங்களை எவ்வாறு கையாளுதல், SMART PHONES பயன்படுத்துதலினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியும் இணையதள வங்கி பயன்பாடு மற்றும் புகைப்படங்களை முகநூல் வாட்ஸ்அப் போன்றவற்றில் பதிவிடக்கூடாது என்பது குறித்தும் கல்லூரி மாணவிகளுக்கு இணையதள விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்