இராமநாதபுரத்தில் உழவர் பெருவிழாவில் பல கோடி மதிப்பில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது..

இராமநாதபுரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்ம ) திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெருவிழா (கிஷான் மேளா) ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், விற்பனை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து விவசாயிகளின் உற்பத்தியை இரு மடங்கு பெருக்க அம் வருமானத்தை மும்மடங்கு அதிகரிக்கவும் பல்வேறு தொழில்நுட்பங்கள் தொடர்பான விவசாயிகள் பெரு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். 53 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 3 ,21,75,979 மதிப்பில் 172 இயந்திரங்களை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசுகையில், கூட்டு பண்ணையத் திட்டத்தில் பெரிய விவசாயிகள் மட்டுமின்றி சிறு, குறு விவசாயிகள் பயன்படும் வகையில் விவசாயிகள் கூட்டாக இணைந்து வேளாண் இடு பொருட்களான விதைகள், உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவற்றை குறைந்த விலையில் கொள்முதல் செய்து விவசாயிகளின் நிகர லாபத்தை அதிகரிப்பதே திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். 2018 -19 நடப்பாண்டில் வேளாண் துறை மூலம் 250, உழவர் ஆர்வலர் குழுக்கள், தோட்டக்கலைத்துறை மூலம் 15 உழவர் ஆர்வலர் குழுக்கள் என 265 உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது . உழவர் ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து 53 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் ரூ. 5 லட்சம், ரூ.2.65 கோடி மாநில அரசால் வழங்கப்பட்டு மாவட்டத்திலுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளது . ராமநாதபுரம் வட்டாரத்தில் 4 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 27,01, 212 திருப்புல்லாணி வட்டாரத்தில் 5 குழுக்களுக்கு 30, 23,812, உச்சிப்புளி வட்டாரத்தில் 5 குழுக்களுக்கு 29, 52,332, திருவாடானை வட்டாரத்தில் 4 குழுக்களுக்கு 2, 36,536, ஆர்எஸ் மங்கலம் வட்டாரத்தில் 4 குழுக்களுக்கு 23, 95,538 நயினார்கோவில் வட்டாரத்தில் 3 குழுக்களுக்கு 18,09,160, பரமக்குடி வட்டாரத்தில் 4 குழுக்களுக்கு 15, 91,704, சத்திரக்குடி வட்டாரத்தில் 3 குழுக்களுக்கு 18,72,431, முதுகுளத்தூர் வட்டாரத்தில் 7 குழுக்களுக்கு 41,34 512, கமுதி வட்டாரத்தில் 8 குழுக்களுக்கு 36, 21,100, கடலாடி வட்டாரத்தில் 6 குழுக்களுக்கு 37, 49, 596 ரூபாய் என 53 குழுக்களுக்க 3 ,21,75,979 மதிப்பீட்டில் 172 இயந்திரங்கள் வழங்கப்பட்டது. 2017 -18 ஆம் ஆண்டு ஆத்ம திட்டத்தின் கீழ் 495 உழவர் ஆர்வர் குழுக்கள் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு 5 உழவர் ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து 99 உழவர்களுக்கு உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் மாநில அரசால் தொடக்க நிதி ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியை பயன்படுத்தி டிராக்டர் 33, ரோட்டாவேட்டர் 93, லேசர் சமப்படுத்தும் கருவி 17 என 660 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ரூ.3.02 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கூட்டுக் கொள்முதல் முறையில் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகிய வேளாண் இடுபொருட்கள் ரூ.40.53 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்து பயனடைந்துள்ளனர். வேளாண் இயந்திரங்களை குத்தகைக்கு விட்ட வகையில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் வங்கி கணக்கில் ரூ.30.22 வரவு வைக்கப்பட்டுள்ளது. 3 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மாவட்ட தொழில் மையம் ராமநாதபுரம் மூலம் தலா ரூ. 5 லட்சம் கூடுதல் இயந்திரங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

வேளாண் இணை இயக்குநர் எல். சொர்ண மாணிக்கம், வேளாண் துணை இயக்குநர் கே.வாசு பாபு, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் மதியழகன், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர் சி. பன்னீர்செல்வம், தோட்டக்கலை துணை இயக்குநர் ஜே. கிஷோர் குமார், கடலோர உவர் ஆராய்ச்சி மையம் முனைவர் ந.சாத்தையா, வேளாண் பொறியியல் துறை செயற் பொறியாளர் (பொறுப்பு) ஆர். ராஜ்குமார், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.கவிதா, மீன்வள துணை இயக்குனர் இ.காத்தவராயன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ. அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர் முன்னதாக வேளாண் துணை இயக்குனர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எஸ்.எஸ்.ஷேக் அப்துல்லா வரவேற்றார் நிறைவில் உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் உ.அம்பேத் குமார் நன்றி கூறினார்

#Paid Promotion