சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: S.P. முரளி ரம்பா துவக்கி வைத்தார்..

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை முன்பு JUNIOR CHAMBER INTERNATIONAL சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா துவக்கி வைத்து பாதுகாப்பு குறித்த சிறப்புரை உரையாற்றினார். பின்னர் வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தார்.

இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் தூத்துக்குடி ஹெர்குலேனியம் சார்பாக அதன் தலைவர் மகேஷ், விழாவின் அமைப்பாளர் செல்ல கணேசன் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் இதன் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் மத்திய பாகம்காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், காவல் துறை போக்குவரத்து ஆய்வாளர் சிசில், சார்பு ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மத்திய பாகம் சார்பு ஆய்வாளர் சுந்தரம், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

#Paid Promotion